Categories
லைப் ஸ்டைல்

தினமும் இத 1 ஸ்பூன் மட்டும் சாப்பிடுங்க… 15 கிலோ வரை உடல் எடை குறையும்… எந்த நோயுமே வராது…!!!

உங்கள் உடல் எடையை மிக விரைவில் குறைக்க வேண்டும் என்றால் தினமும் ஒரு டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டு வந்தால் மட்டும் போதும்.

தற்போதைய காலகட்டத்தில் பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் எடையை குறைப்பதுதான். அதனால் தொப்பையும் அளவுக்கு அதிகமாக பெரிதாகிக்கொண்டே போகிறது. இதனை மிக எளிதில் குறைக்க உதவும் மிக முக்கிய பொருளாக சீரகம் பயன்படுகிறது. இது உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் சிறிது எலுமிச்சை சாறை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

தயிரில் ஒரு டீஸ்பூன் சீரகப்பொடி சேர்த்து கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். 1/2 டீ ஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலம் உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்க நினைத்தால் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வரலாம். மேலும் ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகள் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.

அதன் பிறகு அந்த காய்கறிகளின் இஞ்சியை துருவி போட்டு, எலுமிச்சைச் சாறு உப்பு, சீரகப் பொடி சேர்த்து கலந்து இரவு நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். சீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் கெட்ட கொழுப்புகள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். மேலும் மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, ரத்தசோகையை சரி செய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது மற்றும் வாயுத்தொல்லையை நீக்குவது போன்ற குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உள்ளது.

Categories

Tech |