பாகற்காயில் உள்ள நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம்
நாம் சாப்பிடும் உணவுகள் சத்து நிறைந்ததாக இருக்க, உணவுடன் சேர்த்து எடுத்து கொள்ளப்படும் உணவுகள் காய்கள் கொண்டு செய்யப்பட்டதாக இருப்பது அவசியம். பல வகையான காய்கள் இருந்தாலும், பலரும் சுலபத்தில் சாப்பிட விரும்பாத அதே நேரத்தில் நன்மைகள் பலவற்றை தரும் ஒரு காயாக பாகற்காய் இருக்கிறது. இந்த பாகற்காய் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த பாகற்காயை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் நம் வயிற்றில் உள்ள பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.
பாகற்காயில் கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரு வகை உண்டு.
பாகற்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை கொள்ளக்கூடியது. பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும், தாய்ப்பால் சுரக்க இது உதவும் .
பாகற்காயின் இலையை அரைத்து உடம்பில் தடவி வந்தால் நாய் கடி விஷம் உடம்பில் ஏறாது. சிரங்கு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மிகவும் நல்லது.
ஒரு கைப்பிடி பாகற்காய் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டால் மாலைக்கண் நோய் தீரும்.
இதனுடன் வெல்லத்தை சிறிது சேர்த்து நாம் சாப்பிட்டால் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.
கல்லீரல் பிரச்சினை உள்ளவர்களும், மூலநோய் பிரச்சினைகள் உள்ளவர்களும் தினமும் ஒரு வேளை ஒரு டீஸ்பூன் பாகற்காய் ஜூஸ் உடன் சர்க்கரையுடன் கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.