இளைஞர் ஒருவர் தினமும் பணி முடிந்து இரவில் 10 கி.மீ தூரம் ஓடிச்சென்று வீட்டை அடைந்ததற்கான பின்னணி சோகத்துடன் பெருமையும் வரவழைத்திருக்கிறது.
உத்தரகாண்டின் பரோலா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் மெஹ்ரா (வயது 19). வேலை நிமித்தம் 10 கி.மீ. தொலைவில் உள்ள நொய்டா செக்டார் 16 பகுதிக்கு செல்கிறார். இவர் பணி முடிந்து வீடு திரும்ப இரவாகி விடுகிறது. ஆனால் இவர் மற்றவர்களைப்போல பேருந்து வசதிகளை பயன்படுத்தாமல், இரவு முழுவதும் நொய்டா சாலையில் 10 கிலோமீட்டர் தூரம் ஓடிய வீட்டை அடைகிறார். இதனை நெடுநாளாக படத்தயாரிப்பாளர் வினோத் காப்ரி கவனித்துக் கொண்டிருந்தார். அவர் தனது வாகனத்தில் செல்லும்போது பிரதீப்பிடம் நெருங்கி, வீட்டில் கொண்டு விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் பிரதீப் அதனை ஏற்க மறுத்துவிட்டார். வியர்க்க விருவிருக்க செல்லும் பிரதீப்பின் பின்னணி பற்றி தெரிந்து கொள்வதில் வினோத் காப்ரி மிகவும் ஆர்வம் காட்டினார். இதற்காக சாலையின் ஓரம் நடந்து செல்லும் பிரதீப்பிடம் வாகனம் ஓட்டிய படியே பேசிக்கொண்டு பயணித்திருக்கிறார். ஏன் வழிநெடுகிலும் ஓடிக்கொண்டிருக்கிறாய்? என கேட்டதற்கு ராணுவத்தில் சேருவதற்கு என பிரதீப் பதிலளித்துள்ளார். தொடர்ந்து கூறும்போது காலையில் தன்னால் பயிற்சி மேற்கொள்ள முடியாது.
ஏனென்றால் தினமும் காலை 8 மணிக்கு எழுந்து பணிக்கு செல்வதற்கு முன் உணவு சமைக்க வேண்டும் என கூறியுள்ளார். இவருக்கு இளைய சகோதரர் ஒருவர் இருக்கிறார். மேலும் இவரது தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பிரதீப்பின் இரவு நேர பயணம் அடங்கிய வீடியோ பதிவை காப்ரி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகத்தில் வைரலாகி அதனை 40 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த வயதில் குடும்ப சுமையை ஏற்றுக்கொண்டு லட்சிய நோக்குடன் ஓடிக்கொண்டிருக்கும் பிரதீப்புக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர. மேலும் இதுபோன்ற குடிமக்கள் நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றன என பலரும் சமூக வலைதளங்களில் தங்களுடைய விமர்சனங்களைப் பதிவிட்டுவருகின்றனர்.