பப்பாளி ஜூஸ் சாப்பிடுவதன் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
உலகில் மிகப்பெரிய கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். இந்த பப்பாளி ஜூஸ் குடிப்பதன் மூலம் இதை தடுக்க முடியும். ஏனெனில் பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. புற்றுநோயை உண்டாக்கும் செல்களை உடலில் இருந்து வெளியேற்றி குடல் புற்றுநோயின் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம்.
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் பப்பாளி ஜூஸ் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற டாக்ஸின் வெளியேறி உடல் சுத்தமாகும்.
பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சக்தி அதிகமாக உள்ளது. அருமையான வைட்டமின்கள் அணைத்தும் அடங்கியுள்ளது. வைட்டமின்-சி சத்து இருக்கும். இது சிறந்த பழம். சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்க பப்பாளி சாப்பிட்டால் போதும். நரம்புகள் பலப்படும் மற்றும் ஆண்மை தன்மை பலப்படவும். ஞாபக சக்தியை உண்டு பண்ணும்.
மலச்சிக்கல் பிரச்சனை தீரும். ஊட்டச் சத்துக்களும் நிறைந்த பழம். பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். பொட்டாசியம், வைட்டமின் பி போன்ற சத்துக்களும் இருப்பது கூடுதல் பயன் அளிக்கும். பப்பாளிப்பழத்தை வாரத்திற்கு இரு முறையாவது கண்டிப்பாக சாப்பிடுவது மிகவும் நல்லது.