Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ்… எந்த நோயும் உங்க பக்கத்துல கூட வராது… ட்ரை பண்ணுங்க..!!

இந்த வெயில்காலத்தில் பீட்ரூட் ஜூஸ் நாம் சாப்பிடுவதால் எத்தனை நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது. என்பதைப் பற்றி இதில் பார்ப்போம்.

பல காய்கறிகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டது. அந்த வகையில் உடலுக்கு அதிக நன்மையைத் தரும் காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். மிகவும் சுவையான உணவு. இதனை காய்கறி கூட்டாக பெரும்பாலும் வைத்து சாப்பிடுகின்றனர். சிலர் பீட்ரூட்டை விரும்புவதே இல்லை. வழக்கமாக பீட்ரூட்டை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாடு ஏற்படுவது இல்லை. வைட்டமின் ஏ, பி1, பி2, பி6 போன்ற சத்துக்கள் இதில் அதிக அளவில் உள்ளது. பீட்ரூட்டில் நிறைய இரும்பு சத்து இருப்பதால் இதனை நிச்சயம் உட்கொள்ளவேண்டும்.

ரத்த இழப்பு நாட்களில் இதை உட்கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். வயிற்று பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களுக்கு பீட்ரூட் மிகுந்த நன்மையைத் தரும். பீட்ரூட்டில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளதால் செரிமான அமைப்பை வளப்படுத்தும். எனவே பீட்ரூட்டை பொரியலாகவோ, ஜூஸ் ஆகவோ நாம் வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடலுக்கு நல்ல சத்துக்களைத் கிடைக்கும்.

Categories

Tech |