உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் வெள்ளரிக்காயை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காலநிலைக்கு ஏற்றவாறு உணவுகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதன்படி கோடை காலத்தில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் காய் என்றால் அது வெள்ளரிக்காய் மட்டுமே.
அதில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதால், இதில் உள்ள நீர்ச்சத்து உடலை நீரேற்றம் ஆக வைக்க உதவும். இது மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. சீரான உடல் இயக்கத்திற்கு வழி வகுக்கிறது. மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் இதனை சாப்பிட்டால் அந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இது உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். மேலும் இது எளிதில் பசியை தூண்டாது என்பதால், அதிகப்படியான உணவுகளை உண்பதில் இருந்து நம்மை காக்கும்.
இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கிறது. நமது உடலை பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. இதில் நிரம்பியுள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. அதனால் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக இருக்கும். சருமம் பளபளப்பாக இது உதவும். முக அழகை கூட்டிக் கொள்ள வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வரலாம்.