கோடைகாலத்தில் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்று வெள்ளரிக்காய். இதில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள நீர்சத்து சருமத்தை பளபளப்பாக்கும். வெள்ளரிக்காய் நாம் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நம் உடலில் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்
வெள்ளரிக்காயில் அதிக அளவு ஊட்டச் சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வெள்ளரிக்காயில் மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி ,வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளதால் கோடை காலத்தில் நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது. நாம் வெளியே சுற்றித் திரியும் நேரத்தில் உடலில் அதிக அளவு நீர்ச்சத்து இழக்கின்றோம். இந்த மாதிரி சமயங்களில் வெள்ளரிக்காயை நாம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் .
மலச்சிக்கலை தடுப்பதற்கு வெள்ளரிக்காய் மிகவும் உதவுகிறது. மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு உடலை கெடுத்துக் கொள்வதை விட இயற்கையான முறையில் மலச்சிக்கலை சரி செய்ய இந்த வெள்ளரிக்காயை பயன்படுத்தலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வெள்ளரிக்காய் மிகவும் சிறந்த மருந்து. வெள்ளரிக்காயில் உள்ள கலோரிகள் நமக்கு எளிதில் பசியைத் தூண்டாது. அதிகப்படியான உணவுகளை உண்பதில் இருந்து நம்மை பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வெள்ளரிக்காய் மிகச் சிறந்த வகையில் பயன்படுகிறது.
இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கிறது. நமது உடலை பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. இதில் நிரம்பியுள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. அதனால் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக இருக்கும். சருமம் பளபளப்பாக இது உதவும். முக அழகை கூட்டிக் கொள்ள வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வரலாம்.