Categories
லைப் ஸ்டைல்

தினமும் ஒரு ஸ்பூன் இத சாப்பிடுங்க… எந்த நோயுமே வராது… இதில் அவ்வளவு நன்மை இருக்கு…!!!

தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். சில உணவுகளில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன்படி எள்ளின் இலை, பூ, காய் மற்றும் விதை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதில் பலவகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாக இருக்கின்றன.

கருப்பு எள்ளில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக இருக்கிறது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இவை இரண்டுமே உடலுக்கு பல நன்மைகளைத் தருகின்றன. அவ்வகையில் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதனை சாப்பிடுவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். இதில் இருக்கும் எண்ணெய்கள் உடலில் தோல் பளபளப்பு தன்மையை அதிகப் படுத்துகிறது. மேலும் தோளில் ஏற்பட்டிருக்கும் சொரி, சிரங்கு மற்றும் படை பாதிப்புகளை விரைவில் நீக்கும். தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையும். எள் அதிகமாக சாப்பிடுவது உடலின் உறுப்புகளை வலிமைப்படுத்தும்.

இதில் செம்பு அதிகமாக உள்ளது. இது இரத்தத்தில் பிராண வாயுவை கிரகிக்கச் செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்களை கொடுக்கிறது. தினம்தோறும் சிறிதளவு எல் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி மேலும் அதிகரிக்கும். உடல் இளைத்தவர்கள் சரியான உடல் எடை கிடைக்கும். போதைப் பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்கள் இதனை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது. சிலருக்கு முதுமையின் காரணமாக சரிவர நீர் அருந்தாமல் இருப்பதாலும் சிறுநீர் கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும். அவர்கள் தினமும் சிறிதளவு எல் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அதிக அளவில் வெளியேறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கும்.

Categories

Tech |