நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். சிலர் அளவு கலந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. நாம் தினமும் காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு நாள் முழுவதும் நம்மளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் வகையில் இருக்க வேண்டும்.
அவ்வாறு நாள் முழுவதும் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும் இதை மட்டும் காலையில் எழுந்தவுடன் குடியுங்கள். கேரட் மற்றும் ஆரஞ்சு பழம் இரண்டையும் சேர்த்து ஜூஸ் செய்து பருகவேண்டும். ஆதலால் உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். கேரட்டில் உள்ள டயட்டி நார்ச்சத்து உணவை விரைவில் செரிக்க உதவுகிறது. நமது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. ஆரஞ்சு நமது உடலை சுத்தமாக மற்றும் சுறுசுறுப்பாக வைக்கும். நமது எலும்புகள், கண் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மிகவும் உதவுகிறது. உடலிலுள்ள பல நோய்களுக்கும் இது அருமருந்தாக அமையும். எனவே தினமும் இதனை குடித்து வந்தால் போதும்.