நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.
அதன்படி நாம் தினமும் காலையில் டீ குடிப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு குடிக்கும் டீ உடலுக்கு சத்தானதாக இருக்கவேண்டும். எலுமிச்சை டீ தினமும் காலை குடிப்பது மிகவும் நல்லது. எலுமிச்சை தோலை நீரில் துண்டாக நறுக்கி நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல குடித்துவர உடல் நலத்தை மேம்படுத்தும். இந்த எலுமிச்சை தோல் டீ உடலின் அமில காரத் தன்மையை குறிக்கும் ph அளவு சீராகி, வியாதி எதிர்ப்பு ஆற்றல் மேம்படும். இதனுடன் சிறிது இஞ்சி தோல் நீக்கி சேர்த்தால் ஆற்றல் கூடும்.