Categories
லைப் ஸ்டைல்

தினமும் காலையில் வெறும் வயிற்றில்…. வெற்றிலைச்சாறு குடித்தால்…. ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சினை வாராதாம்…!!!

நம்முடைய அன்றாட வாழ்வில் உணவு பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அவ்வாறு ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் பிரச்சனைகள் வந்து சேரும். எனவே பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தவறான உணவு பழக்கவழக்கங்கள் காரணமாக பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. முன்காலத்தில் நம்முடைய முன்னோர்கள் உணவு சாப்பிட்டு முடித்தபிறகு வெற்றிலையை போடுவார்கள். அதற்கு கரணம் என்ன தெரியுமா? சாப்பிட்ட பிறகு வெற்றிலை சாப்பிடுவதால் எளிதில் செரிமானம் ஆகும்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் அவ்வாறு எடுத்துக்கொள்வதில்லை. இவ்வாறு வெற்றிலை வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம். வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். விஷக்கடியால் ஏற்பட்ட பாதிப்பை முறிக்கும் தன்மை வெற்றிலைக்கு உண்டு. வெற்றிலைச்சாறு 5 மில்லியுடன் இஞ்சி சாறு 5 மில்லி கலந்து தினமும் காலை, வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஆஸ்துமா நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.

Categories

Tech |