Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் காலையில் வெறும் வயிற்றில்… கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

கருவேப்பிலையை நாம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

கருவேப்பிலையை உணவின் மணத்தை அதிகரிக்கவும், சுவையை தூண்டுவதற்கும் சமையலுக்கு அதிக அளவு பயன்படுத்துகிறோம். கறிவேப்பிலை இல்லாமல் சமையலே கிடையாது என்று தான் கூற வேண்டும். அனைத்து குழம்புக்கும் கறிவேப்பிலையை தாளித்து கொட்டினால் தான் அதற்கான சுவையே கூடும்.

ஆனால் கருவேப்பிலையை தினமும் காலை வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றது என்பது தெரியுமா?

காலையில் 10 கருவேப்பிலையும், மாலையில் ஒரு பத்து கறிவேப்பிலையும் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய்கள் சர்க்கரை நோய்கள் கட்டுபடுத்தப்படும்.

கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம் .உடல் பருமன் உள்ளவர்கள் இவ்வாறு சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

இளநரை வராமல் இருப்பதற்கு கருவேப்பிலையை சாப்பிடலாம். மன அழுத்தத்தை குறைப்பதற்கு நாம் கறிவேப்பிலையை நீரில் அலசி சிறிது இஞ்சி, சின்ன வெங்காயம், இரண்டு பல் பூண்டு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து எலுமிச்சை பழத்தை பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் மன அழுத்தம் நீங்கும்.

கொழுப்பு சத்துகளை குறைக்க, உடல் பருமன், உடல் சோர்வு, ரத்த அழுத்தம் போன்றவற்றை குறைப்பதற்கு கருவேப்பிலை மிகவும் நல்லது.

ஒரு லிட்டர் எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்தால் அதில் உள்ள கொழுப்புக்கள் அனைத்தும் நீங்கும்.

சிலருக்கு உணவு உண்ணும்போது அதில் சுவை இருந்தாலும் கூட அதை அவர் நாவினால் உணர முடியாது. இதற்கு கருவேப்பிலையை நன்கு அரைத்து சூடான சாதத்தில் சாப்பிட்டு வந்தால் சுவையை உணரும் தன்மை அதிகரிக்கும்.

Categories

Tech |