உடலிலுள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் எலுமிச்சை மிளகு டீ தினமும் குடிப்பது மிகவும் நல்லது.
அதன்படி எலுமிச்சை பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதில் விட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நமது உடலுக்கு தேவையான அனைத்து மூலக்கூறுகளும் அதில் அடங்கியுள்ளன. இது பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றது. அவ்வாறு பல நோய்களுக்கு மருந்தாக அமையும் எலுமிச்சையைக் கொண்டு டீ தயார் செய்து அதனை தினமும் குடித்து வரலாம். அதற்கு முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு, மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, மிளகு கால் தேக்கரண்டி, தேன் இரண்டு தேக்கரண்டி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு 2 கப் நீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நீர் நன்றாக கொதித்தவுடன் அதில் மிளகு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை வடிகட்டி எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வரலாம். எலுமிச்சை மிளகு டீ கீழ் வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூட்டுவலிகளை குறைப்பதற்கும் சிறந்தது. அதுமட்டுமன்றி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எந்த ஒரு நோய்க்கும் எதிராக போராட இது உகந்தது.