Categories
லைப் ஸ்டைல்

தினமும் காலை வெறும் வயிற்றில்… ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிங்க… உடலுக்கு அவ்வளவு நல்லது…!!!

தினமும் காலையில் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் சாப்பிடும் பழங்களில் மிக ஆரோக்கியமான ஒன்று சாத்துக்குடி. இது எந்த பிரச்சனை இருந்தாலும் ஜூஸ் போட்டு குடிக்க ஏற்றது. ஆறு மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை எவரும் குறிக்கக்கூடியது. சிட்ரஸ் பழ வகையை சேர்ந்த சாத்துக்குடியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதிலுள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் கலோரிகள், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு. சாத்துக்குடியின் ஜூஸில் மட்டுமன்றி அதன் தோலிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதன் தோலை உலர வைத்து பொடி செய்து குடிக்கும் பானங்களில் சிறிது சேர்த்து குடித்து வந்தால் உடல் சுத்தமாவதோடு நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். அதன்படி தினமும் காலையில் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இறப்பை கோளாறுகள் ஆன அஜீரணப் பிரச்சனைகள், மலச்சிக்கல் மற்றும் வயிற்று அல்சர் போன்றவற்றை சரிசெய்ய சாத்துக்குடி உதவும்.

சூடான உணவுகளை உட்கொண்ட பிறகு குடித்தால் செரிமானம் சீராக நடைபெறும். தசையில் உள்ள அலர்ஜியை சரி செய்ய பெரிதும் உதவும். எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. தொடர்ந்து மூன்று மாதங்கள் குடித்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். ரத்தத்தில் உள்ள நச்சு மிக்க பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இதனை தினமும் காலையில் குடிப்பது மிகவும் நல்லது. தொண்டைப் புண்ணைக் குணப்படுத்த உதவுகிறது. ஸ்கர்வி என்னும் நோய் வராமல் பாதுகாக்கிறது. இன்னும் ஏராளமான நன்மைகள் இதில் அடங்கியுள்ளன. எனவே தினமும் காலையில் எழுந்தவுடன் இனி சாத்துக்குடி ஜூஸ் குடிக்க பழகி கொள்ளுங்கள். இதனை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது.

Categories

Tech |