தினமும் காலையில் எழுந்தவுடன் இரவில் ஊற வைத்த வெண்டைக்காய் நீரை குடித்து வந்தால் மிகவும் நல்லது.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.
அதன்படி வெண்டைக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இரவில் படுக்கும் முன்பு ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவேண்டும். அதன்பிறகு மறுநாள் காலையில் அந்த நீரை பருகி வந்தால் எலும்புகள் வலுவடையும். ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு மெலிதல் நோய் குணமடையும். மேலும் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து குடல் புற்றுநோயை தடுக்கிறது.