தந்தை குடித்து விட்டு சண்டை போட்டதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள தொட்டிபட்டியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கிருத்திகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் 12ஆம் வகுப்பு படித்து வரும் கிருத்திகா சற்று மனநலம் பாதித்து உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து குமார் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் கிருத்திகா மனமுடைந்து வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை பார்த்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக கிருத்திகாவை மீட்டு மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கிருத்திகா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற வெண்ணந்தூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கிருத்திகாவின் உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.