உடலிலுள்ள பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் பதநீர் தினமும் குடிப்பது மிகவும் நல்லது.
கோடை காலம் தொடங்கி விட்டது என்றாலே நமது உடலை பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அதிலும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி கோடை வெயிலுக்கு இதமாக இருக்கும் பதநீர் பல நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது. உடல் மெலிந்தவர்களுக்கு சிறந்த ஊக்கம் தரும் பானம் இது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளையும் குணப்படுத்தும்.
வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பை குணப்படுத்தும். எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும். இதனை 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வர மேக நோய்கள் தணியும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு நல்ல மருந்து. மலச்சிக்கலை தீர்க்கும். இதனை தினமும் குடிப்பது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் தொடர்ந்து கொடுத்து வரலாம்.