Categories
லைப் ஸ்டைல்

தினமும் பயன்படுத்தும் டூத்பிரஷ்….இவ்ளோ ஆபத்து இருக்கா…? வாங்க பார்க்கலாம் …!!

தினமும் பயன்படுத்தும் டூத்பிரஷை சுத்தமாக வைக்காமல் இருந்தால் எவ்வளவு ஆபத்து என்று பார்க்கலாம்.

நாம் தினமும் பல் தேய்க்கும் போது டூத் பிரஷ் வைத்து பல்லை தேய்த்துவிட்டு, சுத்தமாக கழுவி டூத்பிரஷ் ஹோல்டரில் வைக்கிறோம். இப்படி டூத்பிரஸை சுத்தமாக வைத்தால் மட்டும் போதாது. டூத்பிரஷ் ஹோல்டரையும் சுத்தமாக வைத்திருப்பதில் தான் நம்முடைய ஆரோக்கியம் இருக்கிறது. நாம் டூத் பிரஷை பயன்படுத்தி அப்படியே ஹோல்டரில் வைத்துவிட்டு சென்று விடுகிறோம். ஆனால் அதன் பிறகு அதில் கொசுக்களும் ஈக்களும் கண்ட இடங்களில் அமர்ந்து விட்டு அந்த பிரஷில் வந்து உட்காரும்.

இதனால்தான் பிரஷ்ஷினை எப்போதும் மூடி வைப்பது நல்லது . நாம் பிரஷ் வைக்கும் ஹோல்டரை மாதம் இரண்டு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். டூத்பிரஷ் மற்றும் ஹோல்டர் இரண்டுமே பக்டீரியாக்கள் வாழும் இடமாக இருக்கிறது. நாம் பல்லைத் துலக்கும் போது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை சுத்தம் செய்வதற்கு டூத் பிரஷ் போராடுகிறது. அந்த டூத் பிரஷில் பாக்டீரியாக்கள் நீங்க ஒரு முறை எப்போதும் சுடு தண்ணீரில் அலச வேண்டும். ஆனால் அது செய்வதற்கு நமக்கு நேரம் இருக்காது.

எனவே பாக்டீரியாக்களை தடுப்பதற்கு டூத் பிரஷ்ஷிற்கு மூடி இருக்கும். அதைத் தவறாமல் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஹோல்டரை சுத்தம் செய்யாமல் அப்படியே வைப்பதால் அதில் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்துவிடுகிறது. இது காலப்போக்கில் அழுக்காக மாறி விடும். அதில் நாம் டூத் பிரஷை கொண்டு வைக்கும் போது அதனால் பரவும் பாக்டிரியாக்களின் தாக்கம் நமக்கு தீங்கு விளைவிக்கும். ஹோல்டரை மாதக்கணக்கில் சுத்தம் செய்யாமல் அப்படியே  வைத்திருக்கிறோம்.

அதனால் வாரத்திற்கு ஒரு முறை சூடு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து பின்னர் பாத்திரம் கழுவும் திரவத்தால் கழுவினால் அதில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் போய்விடும். பின்னர் வெயிலில் சிறிது நேரம் காய வைத்து எடுத்து பிறகு மாட்டி கொள்ளலாம். பேக்கிங் சோடா துர்நாற்றத்தையும், வினிகர் பாக்டீரியாக்களையும் அழிக்கும் தன்மை கொண்டதால் இரண்டும் எப்போதுமே நம் வீட்டில் வைத்திருக்க வேண்டும். இறுதியாக, டூத்பிரஷை மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வது நல்லது.

Categories

Tech |