தினமும் பயன்படுத்தும் பிரஷை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்று பார்க்கலாம்.
நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பிரஸ் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? சிலர் பல மாதங்களுக்கு மாற்றாமல் அப்படியே பயன்படுத்தி வருகிறார்கள். பல் துலக்க பயன்படுத்தும் பிரஸ் மாற்ற வேண்டிய தருணம் எப்போது என்பது நம்மில் பலரும் கவனிக்கத் தவறுகிறோம்.
இதில் நம்முடைய உடல் நலமும் இருக்கின்றது. மருத்துவரின் பரிந்துரைப்படி 12 முதல் 16 வாரங்களுக்கு ஒருமுறை பிரஷ் மாற்றப்படவேண்டும். வீட்டில் யாரேனும் நோய்வாய்ப்பட்டால் அனைவரும் பிரஷ்ஷை மாற்றுவது நல்லது. மேலும் உங்கள் பிரஷை யாராவது தவறுதலாக பயன்படுத்தினாலும் கட்டாயம் மாற்ற வேண்டியது அவசியம்.