உடல் ஆரோக்கியம் மேம்பட தினமும் பீட்ரூட் ஜூஸ் ஒரு டம்ளர் குடித்து வந்தால் நன்மைகள் கிடைக்கும்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிகம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மிகவும் இன்றியமையாத சத்துக்கள் உள்ளன. அவ்வாறு தினமும் பீட்ரூட் ஜூஸ் ஒரு டம்ளர் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சினைகள் சீராகும். பீட்ரூட்டில் இருக்கும் இரும்புச்சத்து, போலேட், வைட்டமின் பி12 போன்ற ரத்த அணுக்களின் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது.
மேலும் ரத்த சோகை உள்ளவர்கள் இதை அடிக்கடி எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்ப காலத்தில் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை இதனை தினமும் குடித்து வர எந்த நோயும் அண்டாது.