மும்பையை சேர்ந்த தொழிலதிபரை எஸ்கார்ட் லைசென்ஸ் தருவதாக கூறி 15,00,000 வரை மோசடி செய்துள்ளனர்
மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கொரோனா ஊரடங்கினால் தொழில்கள் முடங்கி அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக்கொண்டு இருந்தார். அச்சமயம் அவருக்கு தொலைபேசியில் அழைப்பு ஒன்று வந்தது. அதில் சோனாலி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர் அவரது போட்டோ மற்றும் பயோடேட்டா போன்றவற்றை கேட்டுள்ளார். இவரும் அந்தப் பெண் கேட்ட தகவல்களை அனுப்பி வைக்க மறுபடியும் தொடர்பு கொண்ட பெண் ஆண் எஸ்கார்ட் வேலைக்கு தாங்கள் டேட்டிங் வெப்சைட் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதோடு தினமும் புது புது பெண்களோடு பழக தயாராக இருக்க வேண்டும் என்றும் இதற்கு 20,000 முதல் 25,000 வரை சம்பளம் கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த தொழிலதிபர் அதற்கு லைசென்ஸ் கட்டணமாக 4 லட்ச ரூபாய் கட்டினார். அதன்பிறகு போனில் தொடர்பு கொண்ட பெண் நான்கு பெண்களின் தொலைபேசி எண்ணை தொழிலதிபரிடம் கொடுத்து அவர்களிடம் பேசி விட்டு அவர்கள் அழைக்கும் இடத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார்.
சோனாலி கூறியபடி தொழிலதிபர்களும் அந்தப் பெண்களிடம் பேசியுள்ளார். அந்தப் பெண்களும் தொழிலதிபரிடம் எஸ்கார்ட் லைசென்ஸ் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இவ்வாறு கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் வரை தொழிலதிபர் கட்டி ஏமாந்துள்ளார். அதன்பிறகும் எஸ்கார்ட் லைசென்சும் வரவில்லை என்று தான் ஏமாந்ததை உணர்ந்த தொழிலதிபர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தற்போது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.