Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் மதிய உணவுக்குப் பிறகு… இத மட்டும் சாப்பிடுங்க… எந்த நோயும் அண்டாது…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு மதிய உணவுக்கு பின்பு தினமும் இதனை சாப்பிட்டு வந்தால் மட்டும் நல்ல தீர்வு கிடைக்கும்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் சில நோய்கள் ஏற்படுகின்றன. அதனை சரிசெய்ய முடியாமல் அதன் பிறகு மிகவும் அவதிப்படுகிறார்கள். அதனால் தினமும் நாம் உட்கொள்ளும் உணவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடலில் உள்ள சில நோய்களுக்கு மதிய உணவுக்குப்பின் தினமும் இதனை தொடர்ந்து செய்து வந்தால் அந்த நோய்கள் அனைத்தும் ஓடிவிடும். அதன்படி ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் சாறு, தயிர் கலந்து அத்துடன் பெருங்காயத் தூளையும் சேர்த்துக் கொள்ளவும். இதில் சுக்கையும் சேர்த்து பாத்திரத்தை 5 நாட்கள் வெயிலில் வைக்கவும். சாறு சுண்டிய பிறகு, சுக்கை எடுத்து அரைத்து தூளாக்கவும். நண்பகலில் உணவுக்குப் பிறகு இந்த சுக்கு தூள் அரை ஸ்பூன் தொடர்ந்து சாப்பிட்டு வர சளி, இருமல், ஆஸ்துமா, வயிற்று நோய்கள் மற்றும் நரம்பு தளர்ச்சியை முற்றிலும் நீங்கும்.

Categories

Tech |