தெலுங்கானாவில் பாஜக தொண்டர்களின் இடையே பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது “விரக்தி, பயம் மற்றும் மூடநம்பிக்கை ஆகியவற்றால் சிலர் என்னை விமர்சனம் செய்வர். எனினும் இந்த யுக்தியை பா.ஜ.க-வினர் பயன்படுத்தகூடாது. இதற்கிடையில் எனக்கு சோர்வு ஏற்படாதா என்று பல பேர் கேட்கின்றனர். இதற்கான என் பதில், தினசரி 2-3 கிலோ அளவுக்கு மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கப்படுகிறேன்.
அவையெல்லாம் எனக்கு ஊட்டச்சத்தாக மாறுகிறது. என்னையையும், பா.ஜ.க-வையும் விமர்சிப்பதால் தெலுங்கானாவின் சூழ்நிலையும், இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரமும் உயருமானால் தொடர்ந்து விமர்சியுங்கள். இருப்பினும் அம்மாநில மக்களை விமர்சிக்கலாம் என்று எதிர்க் கட்சிகள் எண்ணினால், அதை பொறுத்துக்கொள்ள முடியாது” என மோடி பேசினார்.