தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்து இதுவரை தெரிந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. இனியாவது தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள். என்.பி.எஸ் என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஒரு முதலீடு திட்டம்.இதில் PPF அல்லது EPF ஐ விட சற்றே அதிக வருவாயை நீங்கள் பெறலாம். அதிலும் அதிகமான வட்டியையும் நீங்கள் இதில் பெற முடியும்.
இப்போது உங்களுக்கு 25 வயது என எடுத்து கொள்ளுங்கள் 60 வயதில் பென்சன் கிடைக்க, தினமும் ரூ. 150 சேர்த்து மாதம் ரூ. 4500 முதலீடு செய்யுங்கள் . இதுப்போல் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், குறைந்தது 8% என்ற விகிதத்தில் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். ஓய்வு பெறும்போது, உங்கள் மொத்த ஓய்வூதிய சொத்து ரூ.1 கோடியாக இருக்கும். அப்புறம் என்ன தின கூலியான நீங்கள் கோடிஸ்வரன் தான். இதிலும் இன்னொரு பெனிஃபிட்டும் உள்ளது.
நீங்கள் பணத்தை ஒரே நேரத்தில் திரும்பப் பெற முடியாது. 60 சதவிகிதத்தை மட்டுமே திரும்பப் பெற முடியும், மீதமுள்ள 40 சதவிகிதத்தை நீங்கள் வருடாந்திர முதலீட்டு திட்டத்தில் வைக்க வேண்டும், அதில் இருந்து ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். 60 சதவீதம் பணத்தை எடுத்தப்பின் 40 சதவீதத்தை வருடாந்திர முதலீட்டில் வைக்க வேண்டும். அதற்கு வட்டி 8%. அப்படியென்றால், உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ .27,353 ஓய்வூதியம் கிடைக்கும். முதுமையை பணச்சுமை இல்லாமல் கடக்கலாம்.