எல்ஐசி நீண்ட கால முதலீட்திற்கான ஒரு சிறந்த நிறுவனம் ஆகும். இது உங்களுடைய ஓய்வு காலத்தில் நிம்மதியாகவும், யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்வதற்கான ஏதுவாக நிறைய லாபம் தரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் எல்ஐசி நிறுவனத்தின் முதலீட்டு திட்டங்களில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் ஜீவன் பிரகதி பாலிசி திட்டம். இந்த திட்டத்தில் சிறிய முதலீடு செய்து ஓய்வு காலத்தில் பெரிய தொகையை பெறலாம். இதற்கு சிறப்பு காப்பீடு வசதியும் உள்ளது.
12 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். 45 வயதுக்கு மேல் இணைய முடியாது. குறைந்தது 12 வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 20 வருடங்கள் சேமிக்கலாம். மாதத்திற்கு 6000 ரூபாய் முதலீடு செய்தாலே 20 ஆண்டுகளில் உங்களுக்கு 28 லட்சம் கிடைக்கும். அதாவது ஒரு நாளைக்கு 200 ரூபாய் என்ற வீதத்தில் முதலீடு செய்ய வேண்டும்.