எல்ஐசி நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று மைக்ரோ பசத் ப்ளான் திட்டமாகும். இதில் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டு பயன்கள் உள்ளன. இந்தத் திட்டத்தில் சேர்ந்தால் உங்கள் கையில் இரண்டு லட்சம் ரூபாய் வரையில் காப்பீடு கிடைக்கும். அதற்கு உங்களுடைய கைவசம் ரூபாய் 28 இருந்தாலே போதுமானது. 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம்.
இதில் கடன் வாங்கும் வசதியும் உள்ளது. அவ்வாறு கடன் தேவைப்பட்டால் பிரீமியம் செலுத்தி மூன்று வருடங்களில் கடன் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் உங்களுடைய 35 வயதில் 15 ஆண்டுகளுக்கான பாலிசி எடுத்திருந்தால் அதற்கு நீங்கள் ஒவ்வொரு வருடமும் 10 ஆயிரத்து 300 ரூபாய் செலுத்த வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு ரூ.28 என்ற விதத்தில் பிரீமியம் செலுத்த வேண்டும்.