கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அதனால் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக தங்கள் முதலீடுகளை அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமித்து வைக்க ஆரம்பித்தனர். மேலும் அஞ்சல் துறையில் அதிக வட்டி மற்றும் அதிக வருமானம் தரும் சேமிப்பு திட்டங்கள் அதிகமாக உள்ளது. அதில் குறிப்பாக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு வழிவகை செய்கிறது. இதன் மூலம் வரி விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது.
இதையடுத்து மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து அதனை நீண்ட கால அடிப்படையில் சேமித்து வைத்துக் கொண்டால் மிகப்பெரிய லாபத்தை ஈட்ட (PPF) சேமிப்பு பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் அஞ்சல் துறையில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய அதிகமான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வருகின்றனர். ஏனென்றால், இந்தத் திட்டத்துக்கு 7.1% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்ச தொகையாக, 500 ரூபாயும், அதிகபட்ச தொகையாக 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
தொடர்ந்து ஒரே தவணையில் 1.50 லட்சம் செலுத்த முடியாவிட்டால், மாதம்தோறும் 12,500 ரூபாய் செலுத்தலாம். மேலும் நீண்ட காலம் பணத்தை சேமிக்க நினைப்பவருக்கு ஒரு சிறந்த திட்டமாகும். PPF திட்டத்தின் முதிர்ச்சி காலம் 15 வருடம் ஆகும். தங்களுடைய தேவைக்கேற்ப ஒவ்வொரு 5 ஆண்டுகளாக நீட்டித்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்துடன் தினமும் 34 ரூபாய் சேமித்தால், மாதத்திற்கு ரூபாய் 1,054 முதல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதையடுத்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும். சேமிப்பு தொகை 1.80 லட்சம் ரூபாய் மற்றும் வட்டியுடன் சேர்த்து 3.25 லட்சம் கிடைக்கிறது. தொடர்ந்து 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட 5.32 லட்சம் ரூபாய் கிடைக்கிறது.