Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.7 சேமித்தால்…. மாதம் ரூ.5000 கொடுக்கும் திட்டம்…. யாருக்கெல்லாம் பொருந்தும்…!!!

அமைப்புசாரா துறைகளை சேர்ந்த சாதாரண தொழிலாளர்களும் பென்சன் பயன்களை அனுபவிக்கும் விதமாக பிரதமர் மோடி அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு சாமானிய தொழிலாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் எந்த ஒரு இந்தியரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் முதலீடு செய்ய 18 முதல் 40 வயது வரம்பில் இருக்கவேண்டும். தொழிலாளர்களுக்கு வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலும் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.

நீங்கள் முதலீடு செய்யும் தொகை மற்றும் வயதுக்கு ஏற்ப பென்சன் வருமானம் உங்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம், நான்காயிரம், ஐந்தாயிரம் வரை பென்ஷன் கிடைக்கும். இதில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் வங்கி சேமிப்பு கணக்கு, ஆதார் எண், செல்போன் எண் இருந்தால் மட்டுமே போதும். எவ்வளவு இளம் வயதில் முதலீடு செய்கிறோமோ அவ்வளவு வருமானம் பெறலாம். 18 வயதில் முதலீடு செய்ய நினைத்தால் அறுபது வயதிற்குப் பிறகு மாதம் ரூ.5000 பென்ஷன் கிடைக்கும்.

தினமும் 7 ரூபாய் சேமித்து மாதம் 210 ரூபாய் முதலீடு செய்தால் போதும். மாதம் 1000 ரூபாய் பென்ஷன் வேண்டுமெனில், 42 ரூபாய் முதலீடு செய்தால் போதும். மாதம் 2000 ரூபாய் பென்ஷன் வேண்டும் என்றால் 40 ரூபாயும், மாதம் 3000 பென்ஷனுக்கு 120 ரூபாயும், 4000 ரூபாய் பென்ஷன் பெற 168 ரூபாயும் முதலீடு செய்ய வேண்டும்.

Categories

Tech |