நாம் வயதான காலத்தில் நிம்மதியாக வாழ முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் மிகவும் சிறந்தது. மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச்சிறந்த முதலீடு திட்டத்தில் ஒன்றுதான் இது. தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் 8 முதல் 10 சதவீதம் வரை வட்டி லாபம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் வருமான வரி சட்டம் 80சி இன் கீழ் வரிச்சலுகை வழங்கப்படுகின்றது. என் பி எஸ் திட்டத்தில் தினமும் 74 ரூபாய் சேமித்தால் ஓய்வு காலத்தில் 1கோடி வரை கிடைக்கும்.
அதன்படி தினமும் 74 ரூபாய் என ஒவ்வொரு மாதமும் ரூ.2,230 சேமித்தால் 40 ஆண்டுகளில் உங்களுக்கு ஒரு கோடி வரையில் கிடைக்கும். உங்களின் 20 வயதில் நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்து சேமிக்கத் தொடங்கினால் 60வது வயதில் இந்த சலுகையை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ரூ.27,500 பென்ஷன் கிடைக்கும். 9 சதவீத வட்டியில் இந்த தொகை நீங்கள் பெற முடியும். நீங்கள் சேமித்த தொகை 10.7 லட்சம். வட்டி மூலம் உங்களுக்கு கிடைக்கும் தொகை ரூ.92.7 லட்சமாகும். மற்ற திட்டங்களை ஒப்பிடுகையில் இந்த திட்டம் மிகவும் சிறந்தது.