Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“தினமும் ரூ.79 சேமித்தால் போதும்….. ரூ.28,000 வரை பென்சன் கிடைக்கும்”…. எல்ஐசியின் சூப்பர் திட்டம்…!!!

இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசி பற்றி நாம் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலகட்டத்தில் பணம் என்பது மிக முக்கியமாக பார்க்கப்பட்டு வருகின்றது. நமது உடலில் வலிமை இருக்கும் நாம் சம்பாதிக்கும் பணத்தை நமது குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கு செலவு செய்ததை போக மீதி இருக்கும் சிறிய அளவு பணத்தையாவது நமது முதுமை காலத்திற்காக சேர்த்து வைக்க வேண்டும். அப்படி நீங்கள் ஓய்வு காலத்தில் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவும் ஒரு எல்ஐசி திட்டத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நீண்ட கால முதலீட்டிற்கான ஒரு சிறந்த நிறுவனமாகும். நீங்கள் ஓய்வு பெறும் திட்டம் இருந்தாலோ அல்லது நிதி நெருக்கடி இல்லாத சுகமான வாழ்க்கை வாழ விரும்பினாலோ எல்ஐசி அதற்கு உதவுகிறது. ஓய்வுக் காலத்தில் சுகமான வாழ்க்கைக்காக எல்.ஐ.சி. செயல்படுத்தி வரும் திட்டம்தான் ஜீவன் ஆனந்த் பாலிசி திட்டம்.  இந்த திட்டம் எல்ஐசியின் சிறந்த முதலீட்டு திட்டம் ஆகும். நீங்கள் உங்களது 35 வயதில் இந்தத் திட்டத்தில் இணைந்தால், மாதத்திற்கு 2,500 செலுத்தி வந்தால் போதுமானது. ஒரு ஆண்டுக்குப் பிறகு உங்களுக்கு 22,500 ரூபாய் பணம் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும். இதில் போனஸ் தொகையாக ரூபாய் 10,000 கூடுதலாக கிடைக்கும். 20 ஆண்டுகளுக்கு உங்களுக்கு வருடாந்திர பென்சன் வந்து கொண்டு இருக்கும்.

35 வயதில் நீங்கள் பாலிசியை கட்டத் தொடங்குகிறீர்கள் என்றால்  20 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் கட்டும் தொகை ரூபாய் 5 லட்சம். 20 தவணைகளில் வருடாந்திர பென்ஷன் 22 ஆயிரத்து 500, கூடுதலாக பத்தாயிரம் போனஸ் கிடைக்கும். மொத்தமாக உங்களுக்கு கிடைக்கும் தொகை 4.60 லட்சம். இதில் நீங்கள் டெபாசிட் செய்த தொகை, அதாவதுநீங்கள் கட்டும் தொகை  5 லட்சம். இதை சேர்த்தால் 9.60 லட்சம் கிடைக்கும். நீங்கள் ஒவ்வொரு நாளும் 79 ரூபாயை உங்களுக்காக, உங்களது முதுமை வாழ்விற்காக நீங்கள் சேர்த்து வைத்தால் 60 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் 27 ஆயிரத்து 664 பென்சன் வாங்கமுடியும்.

Categories

Tech |