Categories
தேசிய செய்திகள் பல்சுவை

தினமும் வெறும் 7 ரூபாய் சேமியுங்கள் போதும்…. மாதம் மாதம் ரூ. 5000 கிடைக்கும்…. அட்டகாசமான பென்ஷன் திட்டம்….!!!!

வெறும் ஏழு ரூபாய் சேமித்தால் போதும் மாதம் 5000 பென்சன் வாங்கலாம். இந்த திட்டம் பற்றி இதில் தெளிவாக பார்க்கலாம்.

எல்லா ஊழியர்களுக்கும் தங்களின் ஓய்வு காலம் குறித்த அச்சம் இருக்கும். இந்தியாவில் பெரும்பாலான ஊழியர்கள் தங்களது பணி ஓய்வு காலம் குறித்து சிந்திப்பதே இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வளர்ந்த நாடுகளில் இந்த நிலை தலைகீழாக உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான ஊழியர்கள் பணி ஓய்வு காலத்துக்கு திட்டமிடாததற்கு காரணம் குறைந்த சம்பளம் தான். குறைந்த சம்பளத்தில் முதலீடு செய்தும் ஓய்வு காலத்துக்கு நிதி ஆதாரத்தை தயார் செய்ய முடியும்.

உதாரணமாக மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் நீங்கள் வெறும் ஏழு ரூபாய் முதலீடு செய்து உங்கள் பணி ஓய்வு காலத்திற்கு திட்டமிடலாம். இந்த திட்டத்தில் இந்தியர் அனைவருமே முதலீடு செய்யமுடியும். இதில் முதலீடு செய்வதற்கான வயது வரம்பு 18 முதல் 40 .இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் 60 வயதில் பணி ஓய்வு பெற்ற பின் பலன்களை பெற முடியும். இந்த திட்டத்தில் மாதம் ரூபாய்  1,000, 2000, 3000, 4000, 5000 என்று 5 வகையில் பென்சன்களை பெற முடியும். உங்கள் விருப்பத்திற்கேற்ற தொகையை நீங்கள் முதலீடு செய்யலாம். உதாரணமாக நீங்கள் 60 வயதுக்கு மேல் 5000 பென்ஷன் வாங்க வேண்டும் என்று எண்ணினால் நீங்கள் 18 வயது முதல் 210 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதாவது தினமும் ஏழு ரூபாய் சேமிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் 60 வயதுக்கு மேல் மாதம் 5,000 ரூபாய் பென்ஷன் வாங்கமுடியும். ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.

Categories

Tech |