Categories
பல்சுவை

தினமும் வெறும் 8 ரூபாய் முதலீட்டில் 17 லட்சம் வருமானம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

எல்ஐசி நிறுவனம் இன்சூரன்ஸ் திட்டங்கள் மட்டுமல்லாமல் நல்ல வருமானம் தரக்கூடிய பல்வேறு திட்டங்களையும் வழங்கி வருகிறது. அதில் எல்ஐசி ஜீவன் லாபம் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பது மட்டுமல்லாமல் வருமான வரி சலுகையும் கிடைப்பது கூடுதல் லாபம். இதில் மூன்று ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்திய பிறகு அதை வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டம் ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான திட்டம்.

இதில் மாதம் 233 ரூபாய் முதலீடு செய்து 17 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். மாதம் 233 ரூபாய் என்றால் தினமும் 8 ரூபாய் சேமித்தால் மட்டுமே. இதில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச வயது 8. அதிகபட்ச வயது 59. குறைந்தபட்ச முதலீடு வரம்பு 2 லட்சம். அதிகபட்ச முதலீடு வரம்பு எதுவும் கிடையாது. பாலிசி காலம் 16 முதல் 25 ஆண்டுகள் வரை. உங்களின் விருப்பப்படி இதனை தேர்வு செய்து கொள்ளலாம். பிரீமியம் செலுத்த தொடங்கி மூன்று ஆண்டுகளில் கடனும் பெற்றுக் கொள்ளலாம். பாலிசிதாரர் உயிரிழந்து விட்டால் நாமினிகளுக்கு உறுதி தொகையுடன் போனஸ் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்திற்கு செலுத்தப்படும் பிரீமியத் தொகைக்கு வருமான வரி விலக்கு கிடைக்கின்றது.

Categories

Tech |