Categories
மாநில செய்திகள்

தினமும் 1லட்சத்துக்கும் மேல்…. நிறுத்தாத தமிழக அரசு… 7 நாட்கள் வீட்டில் இருந்தால் போதுமாம்…

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், கொரோனா பாதிப்பு என்று இருந்தால் பரிசோதனைக்காக காத்திருக்க வேண்டியதே இல்லை. இப்போ பரிசோதனையை பொறுத்த வரைக்கும் தமிழகத்தில் 1 லட்சம் அளவிற்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றது. 500 அளவில் பாசிடிவ் வந்த நேரத்திலே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்தது இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான். வெறும் 500 மட்டும் தான் பாசிடிவ் வருகிறது, குறைந்த அளவில் வருகிறது எனவே இந்த பரிசோதனையை தேவை இல்லை என்று நாம் நிறுத்தவே இல்லை.

மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை பரிசோதனைகளை முற்றிலுமாக நிறுத்திய போதும் கூட தமிழகத்தில் மட்டும்தான் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அந்த பரிசோதனைகள் என்பது கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. தினந்தோறும் 1 லட்சத்தி முப்பதாயிரம், நாற்பதாயிரம் என்கின்ற அளவில் பரிசோதனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் அந்த வழிகாட்டு நெறிமுறைகளை பொறுத்தவரை, இப்போது பாசிடிவ் வருபவர்களுக்கு contact trace எதுவும் தேவை இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் contact trace என்பது பாதிப்பு என்று இருந்தால் அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் உடனடியாக அரசுக்கும் தகவல் தர சொல்லி இருக்கிறோம். இப்போது வருகின்ற தொற்று ஏற்படுபவர்களை மூன்று விதமாக பிரித்து ஏற்கனவே அந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. தொற்று என்று கண்டறியப்பட்டவுடன் அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றால் வீடுகளில் தனிமைபடுத்தி கொண்டு 7 நாட்கள் தனிமைபடுத்திகொண்டால் போதும் என்கின்ற வகையில் சொல்லப்பட்டுள்ளது.

ஆனாலும்கூட சென்னை மாநகராட்சி போன்ற பல்வேறு நிர்வாகங்களின் சார்பில்…. சென்னையை பொருத்தவரையில் சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்டங்களைப் பொருத்தவரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிர்வாகங்கள், அவைகளை விர்ச்சுவல் மானிட்டர் என்கின்ற வகையில் மருத்துவப் பரிசோதனைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்களின் மூலம் கண்காணிப்பு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

Categories

Tech |