பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் சுகாதார உதவி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டைகளை விநியோகிப்பதை மத்திய அரசு இலக்காகக் கொண்டிருக்கிறது என மதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா தெரிவித்துள்ளார். இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை மருத்துவமனைகளில் 3.95 கோடி சேர்க்கைகள் செய்யப்பட்டு ரூ.45,294 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்து நான்கு வருடங்கள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆரோக்கிய மந்தன் 2022 எனும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மன்சுக் மாண்டேவியா பேசியபோது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இதுவரை 19 கோடி பேருக்கு காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது மேலும் 204 கோடி அதிகமான ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இது நாட்டின் சுகாதார பதிவுகள் என்மயமாக்கல் என்னும் முக்கிய இலக்கை எட்டி இருப்பதை பிரதிபலிக்கின்றது. இந்த நிலையில் முன்னர் தினசரி ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது 4 லட்சம் முதல் 5 லட்சம் மட்டைகள் வரை விநியோகம் செய்யப்படுகிறது. இதனை ஒவ்வொரு நாளும் 10 லட்சம் காப்பீடு அட்டைகள் வினியோகம் என்ற அளவிற்கு உயர்த்துவதை மத்திய அரசு இலக்காக கொண்டிருக்கிறது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் 28,300 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டிருக்கிறது. அதில் 46 சதவிகிதம் தனியார் மருத்துவமனைகள் ஆகும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 3.8 கோடி மருத்துவமனைகள் சேர்க்கைகள் செய்யப்பட்டிருக்கிறது.
அதில் 46 சதவிகிதம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கை செய்யப்பட்டு இருக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ரயில்வே தகவல் தொடர்பு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பேசும்போது அனைவருக்கும் மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை மருத்துவத்துறையில் தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதன் மூலமாக நாம் அடைய முடியும். அந்த வகையில் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமமும் அடுத்த ஐந்து வருடங்களில் அதிவேக கண்ணாடி இலை தொழில்நுட்பம் மூலமாக இணைக்கப்பட்டுவிடும். அதன் மூலமாக அனைவருக்கும் தொடர்ச்சியான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த முடிகிறது. மேலும் மத்திய அரசின் சுகாதாரத் திட்ட பணியாளர்களின் தரவுகளை பாதுகாப்பதற்கு தேவையான சட்ட நடைமுறைகளையும் மத்திய அரசு உருவாக்கி வருகிறது என தெரிவித்துள்ளார்.