Categories
மாநில செய்திகள்

தினமும் 10,000 டன் நிலக்கரி தேவை…. அமைச்சர் வைத்த முக்கிய கோரிக்கை….!!!

தமிழகத்திற்கு தினமும் 10,000 டன் நிலக்கரியை ஒதுக்க வேண்டும் என்று டெல்லி மின்சாரத்துறை மந்திரியை சந்தித்து செந்தில்பாலாஜி கோரிக்கை வைத்துள்ளார்.

டெல்லியில் மத்திய மின்சார துறை மந்திரி ஆர்கே சிங்குடன் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது எரிசக்தி துறை சம்பந்தமான 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். மேலும் மின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் முக ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 10,000 டன் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழகத்திற்கு தினமும் 10 ஆயிரம் டன் நிலக்கரி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஊழல் பணத்தை கிரிப்டோகரன்சி முதலீடு செய்துள்ள ஒரே அரசியல்வாதி தங்கமணி மட்டும்தான் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |