தினசரி 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அதன் உரிமையாளரின் அலுவலகத்திற்கு உணவு கொண்டு செல்லும் நாயின் அன்பையும், விசுவாசத்தையும் எடுத்து கூறுகிறது.
நமது வீடுகளில் செல்லப்பிராணிகளை வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் நாய்களை செல்லப்பிராணிகளாக பெரும்பாலானோர் விரும்பி வளர்க்கின்றனர். அந்த வகையில் வெளிநாடுகளிலும் சரி, நம் நாட்டிலும் சரி, முக்கிய செல்லப்பிராணிகளாக நாய்கள் இருந்து வருகின்றனர். மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் இந்த நாய்களை மற்றொரு குடும்ப உறுப்பினர்கள் போலவே அனைவரும் நடத்துகின்றனர்.
இந்நிலையில் நாய்களும் மனிதர்களின் உற்ற நண்பனாக திகழ்கின்றன என்பதை இச்சம்பவம் எடுத்துக் கூறுகின்றது. இதையடுத்து ஒரு நாய் எப்போதும் அதன் உரிமையாளர் மீது, மிகுந்த அன்பையும் , விசுவாசத்தையும் கொண்டுள்ளது. இது பற்றிய பல கதைகளையும் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல் தற்போது அந்த நாயின் உரிமையாளர் மீது அது எடுத்துக்காட்டு பேரன்பை விளக்கும் விதமாக சாலையோரம் ஒரு நாய் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இருப்பினும் நாய் நடந்து செல்வதற்கும், உரிமையாளர் மீது அது கொண்ட விசுவாசத்திற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் யோசிப்பீர்கள். ஆனால் அந்த நாய் வெறுமனே சாலையோரம் நடந்து செல்லவில்லை, வாயில் லஞ்ச் பாக்ஸ் ஒன்றையும் கவ்விக் கொண்டு செல்கிறது. அதிலும் தினசரி 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அதன் உரிமையாளரின் அலுவலகத்திற்கு உணவு கொண்டு செல்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்டர்டெயின்மென்ட் நியூஸ் போர்ட்ல்-ஆன பிங்க்வில்லா,சமீபத்தில் தனது இன்ஸ்டா பேஜில், ஜெர்மன் ஷெப்பர்ட் என்ற நாய் டிபன் பாக்ஸ் ஒன்றை வாயில் சுமந்து செல்லும் அழகிய வீடியோவை ஷேர் செய்துள்ளது. மேலும் இந்த வீடியோவின் பின்னணியைப் பார்த்தால், இது மலைப் பகுதியில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து இந்த வீடியோவின் கேப்ஷனில் அந்த நாயின் பெயர் ஷெரு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த வீடியோவில் உள்ள மற்றொரு சுவாரசிய காட்சி என்னவென்றால் சாலையோரம் நடந்து செல்லும் போது வாகனம் எதுவும் சென்றால், பாதுகாப்பிற்காக, உடனே Sheru இன்னும் ஓரமாக நகர்ந்து சென்று விடுவதை, அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. மேலும் இந்த கியூட் வீடியோவை, இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும் மற்றும் 47 ஆயிரத்திற்கும் அதிகமான் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.