Categories
லைப் ஸ்டைல்

தினமும் 2 சாப்பிட்டா போதும்… அப்புறம் சொல்லுவீங்க… அத்தனை பிரச்சினைக்கும் அருமருந்து…!!!

உடலுக்கு பல்வேறு நன்மைகளை பயக்கும் பேரிச்சம் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணர்வு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு பேரிட்சை பழம் உடலுக்கு எவ்வாறான நன்மைகளைத் தருகிறது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். அது ரத்தத்தில் பொட்டாசியம் சத்துக் குறைபாட்டைப் போக்க உதவுகிறது. தசைகள் சுருங்கி விரிவதற்கும், இதய தசைகள் செம்மையாக செயல்படுவதற்கும் அவசியமான பொட்டாசியம், ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

பேரீச்சையில் அதிக அளவு பொட்டாசியமும் குறைந்த அளவு சோடியம் இருப்பதால் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய ஒன்று இது. செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் நல்லது. பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து குடித்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி ஞாபக சக்தி அதிகரிக்கும். கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டு வந்தால் பிரசவம் முடிந்த பிறகு உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும். தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். சளி இருமலுக்கு பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி பருகி வந்தால் சளி இருமல் குணமாகும். இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் நல்லது.

Categories

Tech |