Categories
தேசிய செய்திகள்

தினமும் 2 ரூபாய் சேமித்தால் போதும்…. 36 ஆயிரம் ரூபாய் பென்ஷன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசு கடந்த 2009 ஆம் ஆண்டில் தொடங்கிய பென்ஷன் திட்டம் தான் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா. இந்தத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள், ரிக்ஷா ஓட்டுநர்கள், கட்டுமான பணியாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன் பெறமுடியும். அரசின் உத்திரவாதமான பென்சன் தொகை இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதாவது நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக இரண்டு ரூபாய் என்ற அளவில் சேமிக்க வேண்டும். உங்களின் 60 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால் 18 ஆண்டுகளில் உங்களுக்கு 36 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்த பென்ஷன் தொகை உங்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைவதற்கு உங்களுக்கு வங்கியில் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.

ஆதார் அட்டை மிகவும் அவசியம். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் இணையலாம். இதற்கு அருகில் உள்ள பொது சேவை மையங்களில் இந்தத் திட்டத்தில் இணைய முடியும். மொபைல் நம்பர் கட்டாயம் தேவைப்படும். அதை வைத்து இந்த திட்டத்தில் இணைய தள பக்கத்தில் பதிவு செய்யலாம். இத்திட்டத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும், புகார்களுக்கும் 18002676888 என்ற டோல்ஃபிரீ நம்பர் செயல்பாட்டில் உள்ளது.

Categories

Tech |