Categories
தேசிய செய்திகள்

தினமும் 2 ரூபாய் சேமித்தால் போதும்…. ஒவ்வொரு மாதமும் ரூ.3000 பென்ஷன்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!!

மத்திய அரசு பிரதான் மந்திரி ஷ்ரம் யோனி மாந்தன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டம் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு சிறந்த திட்டம். மேலும் சாலையோர கடைக்காரர்கள்,ரிக்ஷா ஓட்டுபவர்கள் மற்றும் கட்டுமான பணியாளர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். இந்தத் திட்டத்திற்கு அரசு உத்திரவாதம் அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் முதலீடு செய்து வந்தால் மட்டும் போதும். அதாவது தினந்தோறும் இரண்டு ரூபாய் மட்டுமே. இந்தத் திட்டத்தில் உங்களுடைய 18 வயதில் சேமிக்கத் தொடங்கினால் வருடத்திற்கு 36 ஆயிரம் ரூபாய் பென்ஷன் உங்களுக்கு கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் 40 வயதில் இந்த திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டத்தில் 60 வயதிற்கு பிறகு பென்ஷன் கிடைக்கும். வருடத்திற்கு 36 ஆயிரம் ரூபாய் பென்ஷன் என்றால் ஒரு மாதத்திற்கு 3000 ரூபாய். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இணைய முடியும். இந்தத் திட்டத்தில் இணைவதற்கான வசதி பொது சேவை மையங்களில் உள்ளது. வங்கி கணக்கு மற்றும் ஆதார் கார்டு அவசியம் இருக்க வேண்டும்.எனவே வயதான காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் சிரமப்படாமல் இருக்க இந்த திட்டத்தில் இணைந்தால் அதில் வரும் பென்சன் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Categories

Tech |