இன்றைய காலகட்டத்தில் உடல் எடையினால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நடைப்பயிற்சியும் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அனைத்து வயதினருக்கும் உடல் எடையை குறைக்கவும் பிட்டாக வைத்துக் கொள்ளவும் தினசரி 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை சைக்கிள் ஓட்டினால் போதும் என்று ஆய்வில் வெளியாகி தகவல் வெளியாகியது.
இதனால் உடல் பருமனாவது தடுக்கப்படுவதுடன் அதன் மூலம் உருவாகும் மன அழுத்தம், தூக்கமின்மை பிரச்சனைகளும் நீங்கும். மேலும் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் இதய நோய் உள்ளிட்ட பிரச்சனைகளையும் தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.