கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இலவசமாக முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனா பாதிப்பு தற்போது சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவால் தினசரி 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிவகங்கை வாரச்சந்தையில் கொரோனா பரவலை தடுக்க ஒமேகா நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிக்கு முககவசம் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கையில் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இலவசமாக 2000 முககவசங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானதிரவியம் மற்றும் சிவகங்கை நகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஒமேகா நிறுவனத்தின் தலைவர் திலகவதி கண்ணன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தலைவர் தேசிய விருது பெற்ற பேராசிரியர் கண்ணப்பன், நேரு யுவ கேந்திரா முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஜவகர், ஒக்குப்பட்டி ஊராட்சி தலைவர் பழனி ஆறுமுகத்தாள், ஊர்காவல்படை ஒருங்கிணைப்பாளர் மாலா, பாரதி இசைக்குழு நிறுவனர் யுவராஜ், ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமணன், பொறியாளர் கவியரசன் ஆகிய பலரும் முககவசங்களை இலவசமாக வழங்கினார்.