அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் வொர்க் பிரம் ஹோம் ஆஃபர் மூலம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 599 க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு தினந்தோறும் 5 ஜிபி டேட்டா பெறமுடியும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாகவும், அன்லிமிட்டட் போன் கால்களும் பேசமுடியும் .
இதே சலுகையை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பெற வேண்டுமென்றால் 800 முதல் 1000 வரை செலுத்த வேண்டியிருக்கும். எனவே வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் மூலமாக குறைந்த விலையில் அதிக அளவு டேட்டாக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.