Categories
தேசிய செய்திகள்

தினமும் 77 கற்பழிப்பு வழக்குகள்…. மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த ஆண்டில் தினமும் சராசரியாக 77 பெண்கள் கற்பழிக்கப்பட்ட வழக்கு பதிவாகி உள்ளதாக மத்திய அரசு தகவல் கொடுத்துள்ளது.

கடந்த ஆண்டில் அதாவது 2020 ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிராக 3,71,503 வழக்குகள் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட குறைவு. இருப்பினும் கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் மட்டுமே 27,046 ஆகும். இதில் பாதிக்கப்பட்ட 25,498 பேர் 18 க்கும் மேற்பட்டவர்கள் என்பதும், 2655 பேர் சிறுவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 77 வழக்குகள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது. இதில் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக 5310 வழக்குகளும், உத்தரபிரதேச மாநிலத்தில் 2769 வழக்குகள் மத்திய பிரதேச மாநிலத்தில் 2,339 வழக்குகளும், மராட்டிய மாநிலத்தில் 2,061 வழக்குகளும், அசாம் மாநிலத்தில் 1,657 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கற்பழிப்பு சம்பவங்களை தவிர கணவர் மற்றும் உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வகையில் 1,11,549 வழக்குகள் பதிவாகி உள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |