Categories
பல்சுவை

தினமும் 95 ரூபாய் முதலீடு போதும்…. 14 லட்சம் வருமானம்…. போஸ்ட் ஆபீஸில் சூப்பர் திட்டம்….!!!!

எந்தவித சிரமமும் இல்லாமல் அதிக வருமானம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்யலாம். தபால் அலுவலக திட்டங்களில் உங்கள் மூலதனம் பாதுகாப்பாக இருப்பதுடன் நல்ல வருமானமும் கிடைக்கிறது. தபால் அலுவலகத்தில் கிடைக்கும் கிராம சுமங்கல ஊரக தபால் ஆயுள் காப்பீட்டு திட்டம் கிராமப்புற மக்களுக்கு நல்ல பலனைத் தருகிறது. இதில் அதிக பட்ச உத்திரவாத தொகை 10 லட்சம்.

இந்தத் திட்டத்தில் காப்பீடு தாரர்களுக்கு கால முறையில் பலன்கள் வழங்கப்படும். அதாவது காப்பீடுத் அவர் இறந்துவிட்டால் அவரது வாரிசு அல்லது நாமினிக்கு போனஸ் தொகையுடன் மொத்த உத்திரவாத தொகையும் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்த பட்ச வயது 19. அதிகபட்ச வயது 45. இந்தத் திட்டத்தில் மணி பேக் பலன்களும் கிடைக்கின்றன. அதாவது திட்டத்தில் முதலீடு செய்து 6 ஆண்டு, 9 ஆண்டு, 12 ஆண்டு நிறைவடைந்ததும் முறையே 20 சதவீதம் மணி பேக் கிடைக்கும்.

மீதமுள்ள 40% தொகையையும், போனஸ் தொகையும் சேர்த்து மெச்சூரிட்டி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் 25 வயதில் நீங்கள் முதலீடு செய்தால் 95 ரூபாய் சேமிப்பு வேண்டும். ஆண்டுக்கு மொத்தமாக 32,735 ரூபாய் செலுத்த வேண்டும். 16 ஆண்டுகளுக்கு பிறகு 1.4 லட்சம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். ஆண்டுக்கு 48 ஆயிரம் ரூபாய் போனஸ் தொகையும் கிடைக்கும். எல்லாவற்றையும் சேர்த்தால் மொத்தமாக 13.72 லட்சம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.

Categories

Tech |