மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இதனால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் மூலம் இவர்களுக்கு அதிக லாபம் மற்றும் நஷ்டம் ஆகிய இரண்டுமே கிடைக்கும். கோடீஸ்வரனாக வேண்டும் என்பதற்காக பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அது தற்போதைய சூழ்நிலையில் எட்டமுடியாத உயரமாகும். இதற்கு மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தால் அதிக பணம் சேமிக்கலாம்.
அதுமட்டுமில்லாமல் எஸ்ஐபி வங்கியில் மாதமாதம் சிறுசிறு தவணையாக முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும். அதாவது 25 வயது முதல் முதலீடு செய்யத் தொடங்கி ஒரு நாளைக்கு ரூ.50 சேமித்து மாசம் ரூ.1,500 முதலீடு செய்தால் 12 %முதல் 15% வரை வருமானம் பெறப்படும். அதனைப்போலவே 35 ஆண்டுகள் முதலீடு செய்தால் முதலீட்டு தொகை 6.3 லட்சம் கிடைத்து அதில் சராசரியாக 12.5% கிடைத்தால் ரூ.1.1 கோடி வருமானம் உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் 30 வயதில் எஸ்ஐபி யில் முதலீடு செய்யத் தொடங்கினால் மொத்த முதலீட்டுத் தொகையை ரூ.5.4 லட்சம் மட்டுமே கிடைக்கும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முதலீடு 59.2 லட்சம் வருமானம் மட்டுமே கிடைக்கும். ஐந்து ஆண்டு தாமதத்தில் 40 லட்சத்திற்கும் மேல் இழப்பு ஏற்படுகிறது என்பதால் விரைவாக முதலீட்டை தொடங்கினால் அதிக வருமானம் கிடைக்கும்.