தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு ஒப்பிடும்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றது.
டெல்லியில் தினமும் சராசரியாக ஆறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகிறது. பெண்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் 17 சதவீதம் அதிகரித்து வருகின்றது. கணவர், கணவரின் குடும்ப உறுப்பினர்கள், பெண்கள் மீது குடும்ப வன்முறையில் ஈடுபடுவது 29 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி வரை டெல்லியில் ஆயிரத்தில் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.