Categories
கல்வி பல்சுவை

தினம் ஒரு பொது அறிவு தகவல்..!!

1. உலகின் மிகச் சிறிய முட்டையிடும் பறவை இனம் எது.?-  ஹம்மிங் பறவை

2. உலகில் அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது.?ரஷ்யா

உலகில் அதிக மருத்துவர்கள் ரஷ்யாவில் தான் உள்ளனர். சுமார் 6 லட்சத்து 21 ஆயிரம் மருத்துவர்களும், இரண்டரை கோடிக்கு மேற்பட்ட தாதின் மார்களும் ரஷ்யாவில் இருப்பதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

3. அதிக ரத்த ஓட்டம் உள்ள பிராணி எது.?- ஒட்டகச்சிவிங்கி

தரையில் வாழும் உயிரினங்களில்  ஒட்டகச்சிவிங்கியின் ரத்த ஓட்டம் இணைய விலங்குகளோடு ஒப்பிடுவதை விட அதிகம் தான். இவை நின்று கொண்டே தனது குட்டியை ஈனும்.

4. ஜனவரி மாதம் முதலாம் தேதி சுதந்திர தினம் கொண்டாடும் நாடுகளில் ஒன்று எது.? –  சூடான்

1956 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்டனிடமிருந்து சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது சூடான். இது  உட்பட வெஸ்டர்ன், கியூபா போன்ற நாடுகளும் ஜனவரி முதலாம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.

5.  உலகின் அதிகமான நாடுகள் கொண்ட கண்டம் எது.?- ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்கா கண்டத்தில் தான் அதிகமான நாடுகள் காணப்படுகின்றது. 54 நாடுகள் கண்டத்தில் அமைந்துள்ளது.

6. உலகில் தேங்காய் அதிகளவில் விளைகின்ற நாடு எது.?- பிலிப்பைன்ஸ்

தேங்காய் அதிகளவு பிலிப்பைன்ஸில் தான் விளைகிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 30 விதமான வருமானம் நாட்டிற்கு இதன் மூலமே கிடைக்கின்றது.

7. நீரே அருந்தாத நீர்வாழ் உயிரினம் எது.?- டால்பின்

டால்பின் கடல் வாழ் உயிரினங்களில் வினோதமான உயிரினம். கடல் வாழ் உயிரினங்களில் அதிபுத்திசாலி டால்பின்கள். இவை தண்ணீரில் இருந்தாலும் அதனை அருந்துவதில்லை.

8. உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது.?- ஸ்டான் பிஷ்

கல் மீன் இனம் என அழைக்கப்படும் இந்த மீன் இனங்கள் தான் உலகில் அதிக விஷத்தன்மை கொண்ட மீன் இனமாகும். இம்மீன் மனிதனை தாக்கினால் முறையான சிகிச்சை ஒரு மணிநேரத்திற்குள் கிடைக்காவிடில் இதயத்துடிப்பு இல்லாமல் ஏற்பட்டு மரணத்தை சந்திக்க நேரிடும்.

9. தலையில் இதயத்தை கொண்டுள்ள மீன் இனம் எது.?- இறால்

பொதுவாக உயிரினங்களில் இதயம் நெஞ்சுப்பகுதியில் தான் அமைந்திருக்கும். மாறாக இறாலுக்கு இதயம் தலையில் அமையப்பெற்றிருக்கும் .

10. உலகில் அதிக அருங்காட்சியங்கள் உள்ள நாடு எது.? – ஜெர்மனி

ஜெர்மனியில் தான் அதிக அளவு அருங்காட்சியங்கள் அமைந்துள்ளன. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருங்காட்சியங்கள் உண்டு.

Categories

Tech |