Categories
கல்வி பல்சுவை

தினம் ஒரு பொது அறிவு தகவல்..!!

1. மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்ப நிலையை சீராக பராமரிக்கும் ஹார்மோன் எது.? – புரோஜெஸ்ட்ரான் 

2. நிதி சம்பந்தப்பட்ட அவசர நிலை பிரகடனம் எந்த விதியுடன் தொடர்பு கொண்டது.? –  360

3. மாவட்ட நீதிபதிகளை நியமிப்பது யார்.? – ஆளுநர்

4. மாமல்லன் என்ற அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்.? –  முதலாம் நரசிம்மவர்மன்

5. விக்ரமாதித்யா என்ற பட்டத்தை பெற்ற குப்த மன்னர் யார்.? –  ஸ்கந்த குப்தர் 

6. ஒரு பெண் தன் மடியில் குழந்தையை கட்டிக்கொண்டு இருக்கின்ற ஓவியம் ஒன்று எங்கு காணப்படுகிறது.? – பிம்பேட்கா 

7. மக்களாட்சி என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர் யார்.? –  ஹெரோடோட்டஸ்

8. இந்திய அரசியலமைப்பின் அதிகார பங்கீடு எந்த சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.? –  இந்திய அரசாங்க சட்டம் 1935

9. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் மாநில அரசாங்கம் பற்றி விவரிக்கப்படுகின்றது.? –  ஆறாவது பகுதி

10. குடிமக்களின் அடிப்படை கடமைகள் பற்றி விளக்கும் அரசியலமைப்பு திருத்தம் சட்டம்.? – 42

11. சத்திய சோதக் சமாஜ் உண்மையை தேடுவோர் சங்கம் என்ற அமைப்பை நடத்தியவர் யார்.? –  ஜோதிபா பூலே

12. மின் சுற்றுகளில் பயன்படும் மின் உருகு இழை எந்த விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.? – ஜூல்  வெப்ப விளைவு விதி

13. மின்காந்த அலைகள்.? –  குறுக்கலைகள்

14.  மாறா வேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன.? – சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை

15. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு.? –  1972

16. வன பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு.? –  1980

17. டாக்டர் தர்மாம்பாள் தமிழ் ஆசிரியருக்கான நடத்திய போராட்டம் என்ன.? –  இழவு வாரம்

18. எந்த மொகலாய மன்னர் பெயருக்கு அதிர்ஷ்டசாலி என்று பொருள்.? –  உமாயூன்

19. திவாலாகி கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை தான் கிரிப்ஸ் தூதுக்குழு என்று கூறியவர் யார்.? காந்திஜி 

20. பாராளுமன்றத்தில் பணம் மசோதாவை அறிமுகப்படுத்த யாருடைய முன் அனுமதி தேவைப்படுகிறது.? –  குடியரசு தலைவர்

Categories

Tech |