“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாமா ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்று மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் கூறியிருந்தார். இயற்கையாக மரணம் வருவதோ, எதிர்பாராமல் நிகழ்வது கூட ஒப்புக்கொள்ளக்கூடியது. மனமுடைந்து இந்த வாழ்க்கையோ உறவுகளோ வேண்டாம் என்று தற்கொலை செய்து கொள்வது எந்த மனிதனுக்கும் நிகழக் கூடாது. தற்கொலை, அதற்கான காரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் இதன் எண்ணிக்கை புள்ளி விவரம் எல்லாம் நம்மை வேதனைக்குள்ளாகிறது.
அதனைத் தொடர்ந்து நேஷனல் கிரைம் ரெக்கார்ட்ஸ் ப்ரோ வின் புள்ளி விவரப்படி 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 1,33,623 இவர்களில் 93,586 பேர் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ளவர்கள். இதிலும் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மூன்றாவது இடத்தை தமிழகம் பிடித்திருக்கிறது. பொருளாதாரத்தை தேடி ஓடும் தறிகெட்ட இந்திய வாழ்க்கை முறை இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாகும் என்று தோன்றுகிறது.
இன்னொரு முறை இந்த மனித பிறவி நமக்கு வாய்ப்பு என்பது நம்மில் யாருக்கும் தெரியாது. எனவே தெளிவான சிந்தனை உள்ளவர்கள் யாரும் தற்கொலை என்ற முடிவை கையில் எடுக்க மாட்டார்கள். இதனையடுத்து தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு குடும்ப பிரச்சினைகள், எய்ட்ஸ் புற்று நோய் போன்ற நாள்பட்ட தீரா நோய்கள், காதல் இதுதான் முக்கிய காரணங்களாக உள்ளது.
இவற்றைத் தாண்டியும் பல காரணங்கள் உள்ளது அவற்றை பார்ப்போம்.சிறுவயதில் வறுமை, பள்ளியை விட்டு நீங்குதல், நீக்கப்படுதல், பெற்றோர்கள் இடையேயான பிரச்சனை, பெற்றோர் பிரிதல், நண்பர்களோடு கருத்துவேறுபாடு பிரச்சனை, உறவு முறிதல், காதல் தோல்வி, போதைப் பழக்கத்துக்கு அடிமையாகுதல், வேலையில்லா திண்டாட்டம், உடல் ரீதியாக மன ரீதியாக எதிர்கொண்ட நோய் அல்லது பிரச்சனை, மற்றவர்கள் மாதிரி தன்னால் சிறப்பாக வேலை செய்ய முடியவில்லை, எதிர்கொள்ளும் திறன் இல்லாமை , ஆளுமை குறைபாடு ஆகியவையும் காரணமாக உள்ளது. அதனை தொடர்ந்து இதற்கான தீர்வுகள் பற்றி காண்போம்.
- குழந்தைகளுக்கு பள்ளியிலேயே தோல்வியால் ஏற்படும் ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
- அம்மா, அப்பா இருவரும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டோடு பிள்ளைகளை வளர்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு வெளியுலகத் தொடர்பை ஏற்படுத்துவது, விளையாடவிடுவது அவசியம். குழந்தைகளின் ஆளுமைத்திறன் வளர அது உதவும்.
- விரக்தி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏமாற்றங்களைத் தாங்கிக்கொள்ளும் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- இப்போது தற்கொலை எண்ணம் வருபவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க பல மையங்கள் இருக்கின்றன. தொலைபேசியில்கூட தொடர்புகொண்டு அவர்களுடன் பேசலாம். இது நல்ல தீர்வு தரும்.
- ‘Suicide counter’- என்று ஒன்று இருக்கிறது. நடுத்தர வயது உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்வது குறைவு. இளைஞர்களும், வயதானவர்களும் தற்கொலை செய்துகொள்வதுதான் அதிகம். இளைஞர்களுக்கு வாழ்க்கையில் சில சவால்களை எதிர்கொள்ளும் திறன் குறைவாக இருப்பதால் இது நேர்கிறது. வயதானவர்களுக்கு `எல்லாம் போய்விட்டது, நமக்கு யாரும் இல்லை, வாழ்வதில் அர்த்தம் இல்லை’ என நினைத்து இந்த முடிவைத் தேடுகிறார்கள். 30 – 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மனைவி, குழந்தைகள் இருப்பார்கள். பிள்ளைகளை வளர்க்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என நிறைய பொறுப்புகள் இருக்கும். இந்தப் பொறுப்புகளை வளர்த்துக்கொள்வதைத்தான் `Suicide counter’ என்று சொல்கிறோம். `என் பிள்ளைக்கு கல்யாணம் செஞ்சுட்டா போதும். அதுக்கப்புறம் எனக்கு ஒண்ணும் இல்லை. செத்துப் போய்விடுவேன்’ போன்ற எண்ணங்களை வளர்த்துக்கொண்டால் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணத்தைத் தவிர்க்கலாம்.
- உறவினர்களுடனான உறவைப் பேணுவது, நண்பர்களுடன் அதிகமான நேரத்தைச் செலவிடுவது, ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது எல்லாமே இதற்கு நல்ல தீர்வைத் தரும்.
- ஓய்வுகாலத்தைக்கூட பயனுள்ள வகையில் ஏதாவது அமைப்போடு சேர்ந்து பணியாற்றுதல், மற்றவர்களுக்கு உதவி செய்வது என அர்த்தமுள்ளதாக வாழ்க்கையை மாற்றிக்கொண்டால், இந்த எண்ணம் வராது.
- தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் இடங்களைத் தவிர்ப்பது நல்லது. உயரமான இடங்கள் பாதுகாப்பற்ற இடங்களில் அதை நெருங்க முடியாதபடி தடைகளை ஏற்படுத்தலாம். அதற்கு அரசு ஆவன செய்யலாம்.
- பெரும்பாலானவர்கள் பூச்சிகொல்லிகளைத்தான் தங்களைக் கொல்லும் ஆயுதமாகக் கையில் எடுக்கிறார்கள். இலங்கையில்கூட இதற்கு கட்டுப்பாடு வந்துவிட்டது.
- அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே, பெற்றோரே குழந்தைகளை எதையும் எதிர்கொள்ளத் தயார்ப்படுத்த வேண்டும். பரீட்சை வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் நடப்பதல்ல. ஒரு மாதம் கழித்து இன்னொரு பரீட்சை எழுதிக்கூட தேர்ச்சி பெற்றுவிடலாம் என தைரியம் கொடுக்கலாம். இதுகுறித்து ஊடகங்களிலும் பரவலாகச் சொல்ல வேண்டும்.
- பள்ளிகளில் ஸ்டூடன்ட் கவுன்சலர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு மாணவனுக்கோ, மாணவிக்கோ பிரச்னை வரும்போது அவர்களுக்கு உரிய ஆலோசனை தர வேண்டும்.
- எப்போதாவது பொருளாதார மந்தநிலை வரும்போதும் தற்கொலைகள் அதிகரிக்கும். அந்த நேரத்தில் அரசும் மக்களுக்கு உதவ வேண்டும்.