Categories
உலக செய்திகள்

டிக் டாக் செயலி…. இந்தியா,அமெரிக்கா மட்டுமில்ல… ஆஸ்திரேலியாவிலும் தடை….?

டிக் டாக் செயலியை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தடை செய்ததை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் தடை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சீனாவில் உள்ள பைட்- டேன்ஸ்  நிறுவனத்தின்  டிக் டாக் செயலி முன்னணி வீடியோ செயலியாக திகழ்ந்தது. ஆனால் இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்ததை தொடர்ந்து அமெரிக்காவும்  டிக் டாக் ஆப் செயலியை தடை செய்வதை பற்றி யோசித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் டிக் டாக் செயலி குறித்து கருத்து தெரிவித்துள்ளது.

சீன நாட்டின் செயலியான டிக் டாக் பயனர்களின் சுயவிவரங்கள் போன்ற தகவல்களை திருடி சீனாவிடம் பகிர்ந்து விட்டதாக தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இணையதளம் சார்ந்த நிறுவனங்களிடம் அரசுகள் அவ்வப்போது பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.முன்னதாக ஆஸ்திரேலியாவில் டிக் டாக் நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை நிறுவியுள்ளது .அன்றைய தினத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சகம் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி தொடர்ந்து விவாதம் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலியாவின் பிரதமரான ஸ்காட் மோரிசன் கூறுகையில் பயனாளர்களின் தகவல் விவரங்களை திருடுவது தொடர்பாக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதுதொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  மற்றும் 16  லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆஸ்திரேலியாவில் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அத்து மீறல்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |